Friday, March 18, 2011

9. புலம்பித் தவிக்கும் இவ்வுலகத்திற்குத் தேவையானது சுவிசேஷப் பிரபல்யமே




இது இருபதாம் நூற்றாண்டு. தீயச் செயல்கள் எங்கும் நடைபெறுகின்றன. கள்ள மார்க்கங்கள் எப்பக்கங்களிலும் அதிகரிக்கின்றன. சாத்தானுடைய வல்லமையான கருவியாகிய பொதுவுடைமை, கிறிஸ்து மார்க்கத்தை மேற்கொள்ள அச்சுருத்துகிறது. விஷவாயுக்குண்டுகள் மக்களை அழிக்க ஆயத்தமாயிருக்கின்றன.

மனித சரித்திரத்தில் வரப்போகும் 20 வருடங்கள் மிகவும் பயங்கரச் சம்பவங்கள் நடக்கும் காலமாயிருக்கும். உலகைக் கொந்தளிக்கச் செய்யும் அடையாளங்கள் சீக்கிரம் நடைபெறப் போகிறது.
உலக மாநாடுகள் பல நடைபெறுகின்றன. சில நன்மைக்காக, சில தீமைக்காக நடைபெறுகின்றன. மனுமக்கள் அழிவை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரமான புரட்சிகள் ஆங்காங்கு நடைபெறுமாபோலத் தெரிகிறது. சிருஷ்டிகள் சகலமும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. கர்த்தரின் வருகை சமீபம் என்று காட்டுகின்றன.

சுவிசேஷப் பிரபல்யத்தின் முக்கியத்துவம்

சுவிஷேசம் தேவபெலனுள்ளதாயிருக்கிறது. சுவிசேஷமே இக்காலத்தில் அறிவிக்கப்படவேண்டியது அவசியம். மார்க்க எழுப்புதல் இல்லாவிடில் நரஜாதி நாசமாய்ப்போம். பற்பல விஷயங்களில் நாம் ஒன்றுபடாவிட்டாலும் சுவிசேஷம் என்னும் விஷயத்தில் ஒன்றுப்படக்கூடும். ஆத்துமாக்களை ஆண்டவரிடம் கொண்டுவரும் இச்சுவிசேஷ வேலையில் நாம் ஒன்றுபட்டு வேலை செய்ய முடியும். சுவிசேஷகர் அடிக்கடி நமது சபைகளில் ஊழியம் செய்ய நாம் இடம் கொடுக்க வேண்டும். புது ஊழியருக்கு ஜனங்கள் கவனமாய்ச் செவி கொடுப்பார்கள். நம்மால் ஆதாயம் பண்ண முடியாத சில ஆத்துமாக்கள் புதிதாய் வந்த சுவிசேஷகரால் ஆதாயம்பண்ண முடியும்.

டொரான்டோவில் நான் நடத்தின சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்கள் 6 மாதங்கள் நடைபெற்றன. தவறாது ஒவ்வொரு இரவிலும் நடந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் 2,3 ஆராதனைகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. அக்கூட்டங்களிலெல்லாம் நான் தலைமை தாங்கினேன். அந்த 6 மாதக்காலங்களில் 12 பேருக்கு மேற்பட்ட பலவித சுவிசேஷகர்கள் வந்து பிரசங்கம் செய்தனர். ஜனங்கள் ஆவலுடன் திரளாய் வந்தனர். நூற்றுக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டார்கள். அக்கூட்டங்கள் மூலம் வேலை பலப்பட்டது. அவ்வருடந்தொடங்கி, கடந்த வருடங்களிலெல்லாம் ஒவ்வொரு வருடத்திலும் 2 அல்லது 3 சில சமயங்களில் 6 சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்க்களை நான் ஒழுங்கு செய்து நடத்துகிறேன்.

இவைகளெல்லாம் ஜனங்க்களின் ஆவிக்குரிய ஜீவியத்தை ஊக்குவித்து, புது உற்சாகத்தையும் அவர்களில் உண்டு பண்ணுகிறது. விசேஷித்த கூட்டங்கள் இல்லாத சமயங்களில் நானே பிரசங்கம் செய்கிறதுண்டு. நான் ஒருவனே பிரசங்கம் செய்கிறவனாயிராமல் வெளியிலிருந்து பிரசங்கிமாரை அழைத்துச் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு அறிவித்து வருகிறேன்.

சுவிசேஷ ஊழியத்தின் கஷ்டங்கள்

சுவிசேஷப் பிரபல்யமும், எழுப்புதல் கூட்டங்களும் ஒரு பட்டணத்திலே நடைபெறுமானால் அவ்விடத்திலுள்ள சகல திருச்சபைகளும், ஊழியரும் ஒன்றுபட்டு அவைகளில் பங்குபெற்ற காலம் இருந்தது தற்காலத்திலோ, ஒரு சுத்த சுவிசேஷகர் வந்து ஓர் ஆலயத்தில் பிரசங்கம் செய்தால் மற்றச் சபைகளும், போதகரும் அக்கூட்டங்களில் பங்குபெறாமல், தங்கள் சொந்த ஆலயங்களிலேயே வழக்கம்போல் ஆராதனை நடத்துகிறதுண்டு. இது சரியல்ல ஆத்தும ஆதாயம் பண்ணும் இவ்வூழியத்தில் சகல சபைகளும் ஒன்றுபட்டு உழைப்பதே நல்ல முறை.

நமக்கு வேத ஆராய்ச்சிக் கூட்டங்களும் மாநாடுகளுந்தான் தேவை; சுவிசேஷப் பிரபல்யம் அவசியமில்லை எனச் சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுவிசேஷப் பிரபல்யத்தினாலும், எழுப்புதல் கூட்டங்களினாலும் மட்டுமே அனேக ஜனங்கள் உற்சாகமடைந்து தேவ திருவசனங்களை வாசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் ஏவப்படுகின்றனர். இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது ஜனங்கள் திருப்பப்பட்டு வேத ஆராய்ச்சி செய்வது வழக்கம். வேத பாட வகுப்புகளும் ஒழுங்கு செய்கிறதுண்டு தனித்தாள் ஊழியஞ் செய்யப் போதனை கொடுப்பார்கள். புதிதாய் குணப்பட்டவர்கள் சாட்சி கூறி, பொதுக் கூட்டங்களில் ஜெபம் செய்வார்கள். சுவிசேஷப் பிரபல்யம் இல்லாதவேதபாடம் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போன்றது, சுவிசேஷப் பிரபல்யமோ வேத ஆராய்ச்சியைத் தூண்டிவிட்டு, ஏவி எழுப்பி ஆசீர்வாதம் உண்டாக்கும்.

சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களுக்குப்பின் தொடர்ச்சியான ஊழியஞ் செய்வது நல்லது. சுவிசேஷகர் மருத்துவச்சியைப் (நர்ஸ்) போலிருக்கிறார். மருத்துவச்சி பிள்ளை உலகிற்பிறப்பதற்கு உதவி செய்கிறாள். ஆனால் அவள் எக்காலமும் பிள்ளையின் பக்கத்திலிருந்து அதை வளர்க்க முடியாது. பெற்றோரோ அதைக் கவனிக்க வேண்டும். இதைப்போன்றே தொடர்ச்சியான வேலை இருக்கிறது. சுவிசேஷகர் சென்றபின், பெற்றோரைப் போலிருக்கும் போதகரும், ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியரும், வாலிபர் சங்கத்தின் தலைவர்களும் புதிதாய்க் குணப்பட்டவர்களைக் கவனித்து வர வேண்டியது, அவர்களுக்கு வேதத்தின் முக்கிய சத்தியங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் சத்தியத்தில் நிலை நின்று, இயேசுநாதருக்கு உற்சாகமுள்ள ஊழியக்காரராக விளங்குவார்கள்.

பல சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களில் போதகரைக் குறைவாய்ப் பேசுகிறதுண்டு. போதகரின் கரங்களைத் தாங்கி அவர்களுக்கு உதவிசெய்து ¨தைரியமூட்டுகிற சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களே தேவை. ஒரு சுவிசேஷகர் ஜனங்களுக்குமுன், அச்சபையின் போதகரைக் குற்றஞ்சாட்டி, கண்ணியக் குறைவாய்ப் பேசுவது பெரிய தப்பு.

ஒரு போதகருக்கு எண்ணற்ற போராட்டங்கள் இருக்கின்றன. ஜனங்களுக்கு முன் அவரைக் கனம் செய்யவேண்டும். இக்காரணத்தினால், ஒவ்வொரு சுவிசேஷகரும் சில வருடங்களாவது போதகராக ஊழியஞ் செய்ய அனுப்பப்படவேண்டும். அப்பொழுது அவர் போதகருடைய கஷ்டங்களில் அனுதாபங்கொள்ளவும், அவருக்கு எவ்வித்தில் உதவி புரியவும் அறிந்துகொள்வார்கள். மேற்கூறிய காரணத்தினாலேதான், அநேக சபைகள் சுவிசேஷப் பிரபல்யக் கூட்டங்களை வெறுக்கின்றன.

நான் போதகராகவும், சுவிசேஷகராகவும் என் அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன். போதகரது ஊழியமே, சுவிசேஷகரது ஊழியத்தைவிட மிகவும் கஷ்டமானது. ஒரு சுவிசேஷகர் 2 அல்லது 3 வாரங்கள் ஓர் இடத்தில் ஊழியஞ் செய்து, அதன்பின் யாதொரு கஷ்டமும் இன்றி இவ்வூரை விட்டுப் போய் விடுவார். ஒரு போதகரோ அங்கேயே இருந்து பல வகைக் கஷ்டங்களையும் சகிக்க வேண்டும். இக்காரணத்தை முன்னிட்டு நான் என் சபையை விட்டு அடிக்கடி வெளியே போய், சுவிசேஷக் கூட்டங்களில் பங்கு பெறுகிறதுண்டு. சிறு தகராறுகளை நான் மறந்து போக இது ஏதுவாகும். ஆகவே, சுவிசேஷகர்கள் போதகரோடு ஒத்துழைத்து, அவர்களை உற்சாகப் படுத்தி, ¨தைரிய‌மூட்டி உதவி செய்ய வேண்டும்.

சுவிசேஷப் பிரபல்யத்தின் அவசியம்

உலகசுவிசேஷகர்கள் எல்லாரும் மரித்துப்போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது ஒருவரும் உயிரோடில்லை. டி.எல். மூடி போய்விட்டார் கே.ஏ. டோரி, ஜே உல்பர் சேப்மேன், பில்லிசண்டேயும், தங்கள் வேலையை முடித்துப் போய்விட்டனர். ஆகவே மிகவும் சொற்ப பேரே இவர்களின் ஸ்தானத்திலிருக்கிறார்கள். வேத கலாசாலைகள் தற்சமயம் போதகர்களையும், மிஷனெரிகளையுமே ஆயத்தஞ் செய்கிறதேயொழிய சுவிசேஷகரைப் பக்குவப்படுத்துகிறதில்லை. எத்தனை பேர் சுவிசேஷப் பிரபல்யத்தின் சரித்திரத்தையும், எழுப்புதல் சரித்திரத்தையும் எடுத்துப் படிக்கிறார்கள்? பிரசித்தி பெற்ற சுவிசேஷகர், எழுப்புதல் பிரசங்கிமார் இவர்கள் ஜீவிய சரிதையையும், ஊழியமுறைகளையும் பற்றி எத்தனை பேர் படிக்கிறார்கள் எத்தனை உபாத்திமார் எப்படிச் சுவிசேஷக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தங்கள் மாணவருக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்?

கனடாவில் சுவிசேஷகர்களை நியமித்த காலமிருந்தது. இவ்வழக்கம் இப்போது பல சபைகளில் இல்லை. சகல தேசங்களுக்கும் தற்சமயம் வேண்டியது சுவிசேஷகர்களைப் படைகளாகச் சேர்த்து, ஒவ்வொரு இடத்திற்கும் அனுப்பி, ஜனங்கள் கடவுளண்டை திருப்பும்படி கூடி அறிவிக்கச் செய்வதே.
சுவிசேஷப் பிரபல்யக் கூட்டத்திற்கும், எழுப்புதல் கூட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சுவிசேஷக் கூட்டம் எழுப்புதல் கூட்டம் அல்ல. ஆனால் அது எழுப்புதல் கூட்டமாக மாறலாம்.

சுவிசேஷக் கூட்டங்க்களில் உலகத்துக்கடுத்த காரியங்களைப் பேசுதல் நல்லதல்ல. விசேஷமாக பண விஷயமக அதிகமாய்ப் பேசுவது சரியல்ல. ஒவ்வொரு சுவிசேஷகரும் போதகரைபோல ஒழுங்கான சம்பளம் தலைமை ஸ்தாபனத்தின்மூலம் பெறுவது நல்லது. அப்படியானால்தான் பணவிஷயமாய் அவரைக் குறித்துக் குறைகூற இடமிராது.

எனக்கு இவ்வளவு பணம் தேவை எனக்கேட்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. தேவனுடைய பிள்ளைகள் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்டுக் கொடுக்கிறதையே நான் பெற்றுக் கொள்ளுகிறதுண்டு. சில சமயங்களில் குறைவாய்க் கொடுப்பார்கள். வேறு சமயங்களில் நான் எதிர்பார்ப்பதற்கு அதிகமாய்க் கொடுக்கிறது உண்டு. கடவுளின் நாம மகிமைக்கென்று நாம் ஊழியஞ் செய்யும்போது, அவர் ஒரு பொழுதும் நமக்கு குறைவு வைக்கிறதில்லை. அநேகர் சுவிசேஷக் கூட்டங்கள் அல்லது எழுப்புதல் கூட்டங்களின் மூலமாகவே இரட்சிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விசேஷித்த கூட்டங்களின் மூலமாக 100-க்கு 62 பேர் கிறிஸ்துவினிடமாய் இழுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, வாலிபர்கள் சுவிசேஷ பிரலயத்தில் ஆர்வம் கொண்டு நமக்கு முன் உழைத்த பெரியோர்களின் ஸ்தானத்தில் வந்து இவ்வூழியத்தை நிறைவேற்றுவது அவசியம்.

சுவிசேஷப் பிரபல்யத்தின் பலன்கள்

நான் அநேக வருடங்களாக மிஷன் ஊழியத்திலும் சுவிசேஷப் பிரபல்யத்திலும் ஈடுப்பட்டிருக்கிறேன். முந்தின காலங்களில் ஒவ்வொரு வருடமும் சராசரி 500 பேர் குணப்பட்டார்கள். புதிதாய் இரட்சிக்கப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு வந்தப்படியால் பழகிய கிறிஸ்தவர்கள் முந்தி வந்தாலொழிய அவர்களுக்கு உட்கார இடமில்லாமல் போயிற்று. ஜனக்கூட்டம் அத்தனை திரளாயிருந்தபடியால் தீ அணைக்கும் அதிகாரி ஆபத்து உண்டாகாதபடி கூட்டத்தை குறைக்கும்படி என்னை வேண்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. நான் இச்செய்தியை ஜனங்களுக்கு அறிவித்தபோதிலும் ஜனங்கள் அதிதிரளாய் வந்து உட்காருவதற்கும் இடம் இல்லாமல், சுவர் ஓரமாகவும், படிகளிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அனேகர் இடமின்றி வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள். எங்கள் ஆலயத்தில் ஒரு பெரிய கீதவாத்திப் பெட்டி இருந்தது. அது அதிக இடத்தை அடைத்தபடியால் அது விற்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய 'காலரி' கட்டப்பட்டு அதில் அநேகர் உட்காரும்படி வசதி ஏற்பட்டது. கூட்டங்களைப் பத்திரிகைக‌ளில் விளம்பரம் செய்வதை நிறுத்தவேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் ஒவ்வொரு ஞாயிறு இரண்டாயிரம் ஜனங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு நான் பிரசங்கம் செய்தேன்.

சுவிசேஷப் பிரபல்யம் ஆலயத்தை ஜனங்களால் நிரப்பக் கூடியதாயிருக்கிறது. வாரா வாரம், வருடா வருடம் அப்படியே நிரம்புகிறது. இதை நான் ரூபித்துக் காட்டியிருக்கிறேன். பேர்ஸ்டன் பட்டணத்தில் பார்க் தெஉ ஆலயத்தில் நான் நடத்தின சுவிசேஷக் கூட்டத்தில் ஒரு பெரிய மார்க்க சீர்திருத்தம் நடந்தது. 200-கு மேற்பட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகத் தீர்மானம் செய்தார்கள்.

கடவுள் அதிசயகரமாகக் கிரியை நடப்பித்தார். சுவிசேஷப் பிரபல்யம் பார்க் தெரு சபைக்கு செய்த அதே கிரியைகளை மற்றச்சபைகளுக்கும் செய்யக் கூடியதாயிருக்கிறது. அச்சபையின் போதகரே இதற்குச்சாட்சி கூறுவார்.

ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடந்த சுவிசேஷ பிரபல்யக் கூட்டங்கள் மிகப் பெரியவை. கூடிவந்த ஜன வெள்ளத்திற்குத் தகுந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. நான் தனிமையாகவே அக்கூட்டங்க்களில் பேசினேன். ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் தம் கிரியையை நடப்பித்தார். அவைகளைப்பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. 1938 ஆம் வருடத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களை ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து மக்கள் ஒருபொழுதும் மறக்கவே மாட்டார்கள், நான் குளிர்க் (முறை) காய்ச்சலினால் தாக்கப்பட்டு, மிகவும் பலவீனனாயிருந்தும் கடவுள் தம் கிரியையை நடப்பித்தார். ஆதியோடந்தமாய் அற்புதமாகவேயிருந்தது. குறைந்தது 1000 பேர் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். கூட்டங்கள் முடிவடைவதற்குள் அவர்கள் ஏன் உடன் ஊழியக்காரர்களாக மாறிவிட்டார்கள். அச்சம்பவம் என்றும் மறக்கமுடியாத ஒரு சம்பவம், பலமுறை அவ்விடங்க்களுக்கு வரும்படி நான் அழைக்கப்பட்டும் நான் அங்குபோக முடியாமற்போயிற்று.

ஜமைக்காத் தீவில் 1948 ஜனவரியில் நடந்த சுவிசேஷக் கூட்டங்கள் எழுப்புதல் கூட்டங்களாகவும் மாறின. இக்கூட்டங்க்களை நானும் என் மனைவியும், மகள் பவுல் பிரசங்கியாரும் அவரது மனைவியும் நடத்தினோம். மாலை வேளைகளில் அத்தீவிலுள்ள பெரிய கட்டடத்தில் கூட்டங்கள் நடந்தன. மக்களில் அநேகருக்கு உட்கார இடமற்று நின்றுகொண்டிருந்தார்கள். இரவு கூட்டங்களுக்காக பந்தயச் சாலையை உபயோகித்தோம். சுமார் 5,000 பேர் வருவார்கள் என்று தலைவர் எதிர்பார்த்தார். முதல் இரண்டு இரவுகளில் 4,000 பேரும், மீதியான இரவுகளில் ஆறாயிரம் பேரும் ஆஜராயிருந்தனர் இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு இரவிலும் 10000 பேர் வந்தனர். கடைசி இரவிலோ குறைந்தது பதினைந்தாயிரம் பேர் வந்தனர்.

இரவு தோறும் 100 அல்லது 200 பேர் எங்கள் அழைப்புக்கு இணங்கி முன் வருவார்கள். கடைசி இரவில் 480 பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். தீர்மானம் செய்தவர்களின் மொத்த எண்ணிகை 2,000. ஜனங்கள் மனோ தாகத்தால் ஆராதனை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே கூடிவிடுவார்கள். கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்ல சுமார் அரைமணி நேரம் செல்லும். அதன்பின்புதான், முன்னால் வந்து நிற்கும் ஒப்புக்கொடுத்த பிள்ளைகளோடு நாங்கள் பேசமுடிந்தது. இதற்கு முன் ஜமைக்காவில் வேறெந்த விசேஷத்திற்காகவும் இத்தனை ஜனங்கள் கூடினதில்லை என்று தெரிகிறது அக்கூட்டங்கள் மூலமாக உண்டான எழுப்புதலையும், ஆசீர்வாதங்களையும் ஒருவரும் ஒருக்காலத்திலும் மறக்கவில்லை.

சுவிசேஷப் பிரபல்யத்தின் மகிழ்ச்சி

நான் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்னுமிடத்தில் தேவ ஊழியருக்கென்று சுவிசேஷப் பிரபல்யதின் பேரில் பிரசங்கம் செய்தேன். அது முடிந்தவுடன் ஒருபோதகர் துக்கமுகத்துடன் என்னிடம் வந்து "டாக்டர் ஸ்மித், நீங்கள் சொல்லுகிறதை நன்றாய் அறிந்து சொல்லுகிறீர்களா?" என்று கேட்டார். நான் "நீங்கள் எதைப்பற்றிச் சொல்லுகிறீர்கள்?" எனக் கேட்டேன். அவர் திரும்பவும் "நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களா?" என்றார். நான் மறுபடியும் "எதைப்பற்றிச் சொல்லுகிறீர்கள்?" என்றேன். அதற்கு அவர் "ஒரு பிரஸ்பித்தீரியன் குரு, ஜனங்களை முன் வரும்படி அழைப்பது சரியா?" என்று கேட்டார். அப்பொழுது நான் சொன்னதாவது: "நானும் ஒரு பிரஸ்பித்தீரியன் சபைப் சகபோதகர்தான். நான் எக்காலத்திலும் அழைப்புக் கொடுத்து வாழ்கிறேன். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் எழுந்து வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறதை நான் கண்டுகொண்டு வருகிறேன்" என்றேன். ஆனால் அவர் "நாங்கள் அப்படிச் செய்கிற வழக்கம் கிடையாது" என்றார் "அது எனக்குத் தெரியும், எனினும் ஏன் பிரஸ்பித்தீரியன் குரு அழைப்புக் கொடுக்கக் கூடாது?" என்று திரும்பவும் கேட்டேன்.
அவர் துக்கமுகத்துடன் போய்விட்டார். அதே வாரத்தில் திங்கள் இரவில் நான் பிரசங்க பீடத்திற்குச் செல்லும் சமயத்தில் அந்தக் குரு அதிக பிரயாசப்பட்டு, இரண்டு வாலிபப் பெண்களை என்னிடம் கூட்டிக்கொண்டு வந்தார். பக்கத்தில் வரவே, பிரகாசமான முகத்துடன் அவர் என்னை நோக்கி "அது கிரியை செய்கிறது, அது கிரியை செய்கிறது" எனச் சத்தமிட்டு கூறினார். என்னவென்று நான் அறியக்கூடாமல் "என்ன கிரியை செய்கிறது?" என்று அவரிடம் கேட்டேன். "ஏன்? நீங்கள் சனிக்கிழமை சொன்னது" எனப் பதிலளித்தார். மேலும் அவர் சொன்னதாவது: "என் ஜீவியத்தில் முதல் தடைவையாக ஞாயிற்றுக்கிழமை நான் ஜனங்களுக்கு அழைப்பு கொடுக்க ஆரம்பித்தேன். நான் அடைந்த பலனைப்பாருங்கள்" என்று சொல்லி அந்த இரண்டு பெண்களையும் எனக்கு முன் நிறுத்தினார். நான் அவர்களிடம் கேள்வி கேட்டேன். அவர்கள் இருவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் எனக்கண்டுக் கொண்டேன்.
காரியம் எப்படியென்றால், அவர் பயத்தோடும் நடுக்கத்தோடும் அதற்கு முந்தின தினம் அழைப்புக் கொடுத்தார் அப்பொழுது இரு கரங்களும் உயர்த்தப்பட்டன. என்ன செய்கிறதென்று அறியாமல், அவர் அந்த இருவரையும் எழுந்து நிற்கச் சொன்னார். இருவரும் எழுந்து நின்றனர் அப்போது, என்ன செய்வதுதென்று நிச்சயமற்றவராயிருந்தார். நான் செய்வதை அவர் நினைவு கூர்ந்து அவர்களை விசாரணை அறைக்கு வரும்படி சொன்னார். அவர்களும் திகைக்காமல் வந்தனர். உதவி செய்கிறவர்கள் இல்லாதபடியால் தாமே அவர்களோடு பேசினார். அவர் அப்படிச் செய்தபடியால் இருவரும் இரட்சிக்கப்ட்டார்கள்.
என்னமாறுதல் / அந்தப் பிரஸ்பித்தீரியன் குரு திரும்பிப்போய் தன் ஊழியக் காலத்தில் செய்திராத காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். ஜனங்களை ஆசிர்வாதம் கூறி அனுப்பிவிடாமல் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு சமயம் கொடுத்தார். அவருடைய ஊழியம் முழுவதும் சீர்திருத்தமாயிற்று. சுவிசேஷப் பிரபல்யத்தின் சந்தோஷத்தைத் தன் அனுபவத்தில் அவர் அறிந்தார். ஒரு பிரஸ்பித்தீரியன் சபைப் போதகரும் அழைப்புக் கொடுக்க முடியும் என்பதை அனுபவத்தினால் அறிந்து கொண்டனர்.

என் நண்பனே, நீயும் போய் அப்படியே செய்யும்படி உனக்கு நான் ஆலோசனை கூறுகிறேன்.

No comments:

Post a Comment