Friday, March 18, 2011
5.நிறைவேற்றவேண்டிய ஊழியத்தை நாம் நிறைவேற்றாமல் அசட்டையாயிருக்கலாமா?
"கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?பிரசங்கிக்கிறவர்கள் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?அனுப்பப்படாவிட்டால்
எப்படி பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே" (ரோமர் 10: 13-15)
இவ்வசனங்களில் பவுல் "எப்படி" என்று 4 முறை கேட்கிறார். முதலாவது ஒருவாக்குத்தத்தம் இருக்கிறது. "தொழுதுகொள்" அதாவது "கூப்பிடு", அப்பொழுதுஇரட்சிக்கப்படுவாய், ஆனால் தொழுது கொள்ளவும் கூப்பிடவும் வேண்டுமானால் மக்கள் விசுவாசிக்கவேண்டும். விசுவாசிக்கவேண்டுமானால் அவர்கள் கேள்விப்படவேண்டும். கேள்விப்படவேண்டுமானால் யாராவது பிரசஙிக்கவேண்டும். பிரசங்கிக்கவேண்டுமானால் பிரசங்கி அனுப்பப்படவேண்டும். இவ்விதமாகக் கடவுள் நம்மீது உத்தரவாதத்தை வைக்கிறார். நாம் அனுப்பினால் பிரசங்கிப்பார்; அவர் பிரசங்கித்தால் புறமதஸ்தன் கேட்டு விசுவாசிப்பான்; அவன் விசுவாசித்தால் தொழுதுகொள்ளுவான்; அவன் தொழுதுகொண்டால் இரட்சிக்கப்படுவான்.ஆனால் மேற்கூறிய காரியம் முழுவதும் நம்மிலிருந்தே ஆரம்பிக்கிறது. நாம்முதலாவது அனுப்பவேண்டும். அதிக முக்கியமான வேலை தற்காலத்தில் நாம் செய்யவேண்டிய மிகவும் முக்கியமான ஊழியம் என்ன?மார்க்க எழுப்புதலுக்காக ஜெபிப்பதா? கடவுளுடைய மக்களை இன்னும் ஆவிக்குரிய ஜீவியத்தில் நடத்துவதா? வேத சத்தியத்தைக் கற்று கொடுப்பதா?இவைகள் அல்லவென்று நான் நினைக்கிறேன். இக்காலத்தில் அதிக முக்கிய வேலை யாதெனில் நமடு கர்த்தரின் கடைசி கட்டளிஅயை நிறைவேற்றுவதே. கர்த்தரின் சுவிசேஷத்தை உலகமுழுவதிலுமுள்ள ஜாதியாருக்கும் ஜனத்தாருக்கும் கூறி அறிவிப்பதே. என் சிநேகிதரே, இதுவே மற்றெல்லா ஊழியங்களைப் பார்க்கிலும் முக்கியமான ஊழியம். "நீங்கள் உலகமெங்கும்போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு 16:15).
இக்கட்டளையைக் குறிக்கோளாக வைத்து நமது ஆவிக்குரிய ஜீவியத்தையும்,வேத அறிவையும், கொள்கைகளையும், வேத சாஸ்திர தர்க்கங்களையும்அளவுபார்க்கவேண்டியது. நாம் உண்மையாகவே ஆவிக்குரியவர்களாயும், வேதஆராய்ச்சியாளராயும், சித்தாந்த சமர்த்தராயுமிருப்போமேயானால், சுவிசேஷஊழியத்தையே முதலாவது செய்வோம். நமது ஈகை சுவிசேஷ சேவைக்கேஉதாரத்துவமாயிருக்கும். முதல் ஸ்தானத்தில் வைக்க வேண்டியதை நாம் முதலில் வைக்கவில்லையானால், நமது வேத அறிவும், ஆவிக்குரிய ஜீவியமும் வீணும் வியர்த்தமுமாகும்.
கடவுளின் ஒழுங்கை அறியாதவர்கள் உள் நாட்டிலுள்ள பலவித சேவைகளுக்குத்தங்கள் பணத்தைக் கொடுக்கட்டும். ஆனால் கடவுளின் அழைப்பைக்கேட்ட நாம்தூரத்திலுள்ள பிரதேசங்களில் புது ஊழியம் செய்வதில் நமது சிந்தை முழுவதையும்செலவிடுவோமாக. நாம் நமது பணத்தை இன்னும் சுவிசேஷத்தை அறியாதஆயிரக்கணக்கான மக்களுக்குக் கூற அறிவிக்கும் இந்த ஒரே விஷயமாகவேசெலவிடுவோமாக. நாம் சுவிசேஷத்தைக் கூறாது அடக்கிக்கொண்டால்' அவனுடைய இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்' என்ற வார்த்தை நம்மில்நிறைவேறித் தீரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment