Friday, March 18, 2011

11. இக்காலத்தில் நாம் உயிர்மீட்சி அடைவது எப்ப‌டி?



உயிர்மீட்சி எப்பொழுது வரும்? இக்காலச் சபைகள் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. ஆக உயிர்மீட்சி தேவையே. அது எப்பொழுது வரும் என்றால்; கடவுளின் ஜனங்கள் ஏற்ற முயற்சி செய்வார்களாகில் உயிர்மீட்சி வரும். உயிர்மீட்சியைக் குறித்து இரண்டு விதமான அபிப்பிராயங்களிருக்கின்றன. ஒரு சாரார் உயிர்மீட்சியை உண்டாக்குவது கடவுள், நமது முயற்சிகளால் ஆவதொன்றுமில்லை; ஜெபிக்கவேண்டியதே நமது கடமை கடவுள் தாம் விரும்புகிறபடி செய்வார்; அவரைத் தடுக்கவும், துரிதப்படுத்தவும் மனிதரால் கூடாது எனக் கூறுகிறார்கள், அடுத்த சாராரோ, உயிர்மீட்சிக்காக மனிதன் செய்யவேண்டிய முயற்சிகள் திரள். அவனே அதற்கு உத்திரவாதி என்கிறார்கள்.

இதை ஒரு திருஷ்டாந்தத்தால் பார்க்கலாம். இரண்டு உழவர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒருவன் தன் வயலை நோக்கியப்படியே, தனக்குள் சொல்லுகிறதாவது: "எனக்கு இந்த வருடத்தில் நல்ல விளைச்சல் வேண்டும் என்றாலும் அது என் காரியமல்ல" என்று நினைத்து தன் வீட்டுக்குப்போய் உட்கார்ந்து ஜெபிக்கிறான் அடுத்த உழவனோ,  "எனக்கு இவ்வருடத்தில் நல்ல அறுவடை வேண்டும். ஆக நான் செய்யவேண்டிய கடமைகள் ஏராளம்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, வயலை உழுகிறான். பரம்படிக்கிறான், பயிரை நடுகிறான். தான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செயதபின் கடவுள் ஏற்ற வெயிலையும்மழையையும் கொடுப்பாரென்று அவரையே நோக்கி, அறுவடைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். இந்த‌ இர‌ண்டு உழ‌வ‌ர்க‌ளில் யாரை நீ விரும்புவாய்? நான்  இர‌ண்டாவ‌து ம‌னுஷ‌னையே விரும்புவேன். இவ‌னுக்கே நிதான‌ புத்தியிருக்கிர‌து.

இவ்வாறே உயிர்மீட்சியும் இருக்கிற‌து. க‌ட‌வுள் உயிர்மீட்சியை அனுப்புகிறார். ஆனால் அது வ‌ருமுன் நீயும், நானும் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் ஏராள‌ம் இருக்கின்ற‌ன‌. என்னுடைய‌ திட ந‌ம்பிக்கையும், சொந்த‌ அனுப‌வ‌மும் யாதெனில், எந்த‌ச் ச‌பையும் ஜ‌ன‌மும் த‌குந்த ஆய‌த்த‌முள்ள‌தாயிருந்தால் உயிர்மீட்சி எந்நேர‌த்திலும் உண்டாகும். ச‌ரித்திர‌மும்
அவ்வாறே கூறுகிற‌து.

சார்ல‌ஸ் பின்னி என்ப‌வ‌ரும் இவ்வாறே சாட்சி ப‌க‌ருகிறார். உண‌ர்வ‌ற்று  நிர்விசார‌ம் நிறைந்த‌ ச‌பைக‌ளிட‌ம் அடிக்க‌டி அவ‌ர் சென்று உயிர்மீட்சி  பெறும்ப‌டியான‌ நிப‌ந்த‌னைக‌ளைக் கைக்கொள்ளும்ப‌டி ஏவுவார். அவ‌ர்க‌ள் அவ்வாறே  செய்ய‌வே, அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ல‌த்த‌ உயிர்மீட்சி உண்டான‌து. ஆவிக்குரிய‌  தாழ்ச்சியுள்ள‌ இட‌ங்க‌ளில் உயிர்மீட்சி எச்ச‌ம‌ய‌த்திலும் உண்டாகும்.  தேவை அதிக‌மாயிருக்கும் வ‌னாந்த‌ர‌மும், வ‌ர‌ண்ட‌துமான் இட‌ங்க‌ளில் க‌ட‌வுள் ம‌ழையைப் பெய்ய‌ச் செய்கிறார். 

இங்கிலாந்தில் ஜாண் வெஸ்லி என்ப‌வ‌ர் வேலை செய்த‌ கால‌ம் மிக‌வும் இருளான‌து. அக்கால‌த்திலேயே ஆண்ட‌வ‌ர் உயிர்மீட்சி உண்டாகும்ப‌டி  செய்தார். அவ்வாறே அய‌ர்லாந்தில் 1859 ‍ஆம் வ‌ருட‌த்திலும் வேல்ஸில் 1904 ஆண்டிலும் உயிர்மீட்சி உண்டாயிற்று. சார்ல‌ஸ் பின்னியின் கால‌த்திலேயே, மேற்க‌ண்ட‌ப‌டி அமெரிக்க‌ ஐக்கிய‌ மாகாண‌த்தில் உயிர்மீட்சி ஆர‌ம்பித்த‌து. இக்கால‌த்திலும்  அப்ப‌டியே ந‌ட‌க்கும். அதை நாடித் தேவ‌ வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை.

உயிர்மீட்சி ந‌ம்மைச் சார்ந்த‌தென்றால், நாம் நிறைவேற்ற‌வேண்டிய‌ நிப‌ந்த‌னைக‌ள்,
முய‌ற்சிக‌ள் எவை?

1.
பாவ‌ அறிக்கையும், ந‌ஷ்ட‌ஈடு செலுத்த‌லும்

நாம் தேவ‌னோடு ச‌ரியாயிருந்தால் உயிர்மீட்சி உண்டாகும். நாம் எப்படிச் ச‌ரியாக‌லாம்? பாவ‌ அறிக்கையும், ந‌ஷ்ட‌ஈடு செலுத்த‌லும் வேண்டும். "என்  இருத‌ய‌த்தில் அக்கிர‌ம‌ சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்ட‌வ‌ர் என‌க்குச் செவிகொடார்" (ச‌ங் 66:18). என் இருத‌ய‌த்தில் நான் பாவ‌த்தை ஒளித்து வைத்திருந்தால்  க‌ட‌வுள் நான் சொல்லுகிற‌தைக் கேட்க‌மாட்டார். என் உள்ள‌த்திலிருக்கும் பாவ‌த்தை ஒருவ‌ரும் அறியாதிருக்க‌லாம். ஆனால் தேவ‌ன் அதைப் பார்க்கிறார். நான் அதை அறிக்கை  செய்து, அதை என் உள்ல‌த்திலிருந்து நீக்காவிடில், க‌ட‌வுள் என் ஜெப‌த்தைக் கேட்க‌மாட்டார். "இதோ இர‌ட்சிக்க‌க்கூடாத‌ப‌டிக்குக் க‌ர்த்த‌ருடைய‌ கை குறுகிப்  போக‌வுமில்லை. கேட்க‌க் கூடாத‌ப‌டிக்கு அவ‌ருடைய‌ செவி ம‌ந்த‌மாக‌வுமில்லை. உங்க‌ள்  அக்கிர‌ம‌ங்க‌ளே உங்க‌ளுக்கும், உங்க‌ள் தேவ‌னுக்கும் ந‌டுவாக‌ப் பிரிவினை  உண்டாக்குகிற‌து; உங்க‌ள் பாவ‌ங்க‌ளே அவ‌ர் உங்க‌ளுக்குச் செவி கொடாத‌ப‌டிக்கு
அவ‌ருடைய‌ முக‌த்தை உங்க‌ளுக்கு ம‌றைக்கிற‌து" (ஏசாயா 9:1,2). குற்ற‌ம்  க‌ட‌வுளுடைய‌த‌ல்ல‌; அது என்னுடைய‌து. க‌ட‌வுளின் கை எவ்வ‌ளவோ நீள‌மாயிருக்கிற‌து. தூர‌மாய்ப் போன‌ ஆண்க‌ள் பெண்க‌ள் அனைவ‌ரையும் அது  எட்டிப் பிடித்து  இர‌ட்சிக்க‌க்கூடும். ஒரு ம‌னித‌ன் ஆற்று வெள்ள‌த்தில் விழுந்து, இழுக்க‌ப்ப‌ட்டுப்  போகிறான் என‌ வைத்துக் கொள்ளுங்க‌ள், ப‌ல‌ர் அவ‌னை மீட்க‌த் த‌ங்க‌ள் கைக‌ளை நீட்டி  முய‌ற்சித்த‌போதிலும் முடியாது போயிற்று, கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் க‌ர‌ங்க‌ள்  குறுகிய‌வைக‌ள். ஆனால் க‌ட‌வுளின் க‌ர‌ங்க‌ளோ த‌ண்ணீருக்குள் ஆழ்ந்த‌ ம‌னித‌னையும் எட்டிப் பிடித்து மீட்க‌த்த‌க்க‌தாக‌ அத்த‌னை நீண்ட‌தாயிருக்கின்ற‌ன‌.

அப்ப‌டியானால், குறைவு யாரிட‌மிருக்கிற‌து? "உங்க‌ளுடைய‌ பாவ‌ங்க‌ளே" க‌ட‌வுள்  உங்க‌ளை இர‌ட்சித்து விடுவிக்க‌க்கூடாத‌ப‌டிக்குத் த‌டையாயிருக்கின்ற‌ன‌. பாவ‌மே
மேக‌ம் போன்று க‌ட‌வுளின் முக‌த்தை ம‌றைக்கிற‌து; உங்க‌ளையும் வேறாக‌ப்  பிரிக்கிற‌து.

என் சிநேகித‌னே, நீ ஒரு கிறிஸ்த‌வ‌னாயிருந்தால் எப்ப‌டியும், உன்னை நெருங்கி  நிற்கிற‌ ஏதோ ஒரு பாவ‌ம் இருக்க‌லாம். நீ அநேக‌ பாவ‌ங்க‌ளிலிருந்து  விடுவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆனாலும் ஒரு பாவ‌ம் உன்னை இன்னும் அடிமைப் ப‌டுத்தியிருக்கிற‌து. நீ எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அப்பாவ‌ம் உன்னைத்
தொட‌ர்ந்து பிடிக்கிற‌து. ஒருவேளை அப்பாவ‌ம் ஒரு கெட்ட‌ ப‌ழ‌க்க‌மாயிருக்க‌லாம். அது பாவ‌ம‌ல்ல‌ என‌ நீ நினைக்க‌லாம். ஆனாலும் அதுவே க‌ட‌வுளுக்கும் உன‌க்கும் ஊடே நின்று உன்னை வேறாக‌ப் பிரிக்க‌லாம். மேலும் ஒரு பாவ‌த்தைத‌ திரும்ப‌த் திரும்ப‌ நீ செய்து, அத‌ற்காக‌ ம‌ன்னிப்புக் கேட்க‌லாம். நீ ப‌ல‌வீன‌னாயிருக்கும் ஒரு நொடிப்பொழுதில் உன்னைச் சுற்றியிருக்கும் பாவ‌த்திற்கு நீ முழுவ‌துமாய் ச‌ர‌ண‌டைகிறாய். அது உன்னைப் ப‌ற்றிப் பிடிக்கிற‌து. அதை மேற்கொண்டு உன்னால் வெளியே வ‌ர‌ முடியாது. நீ விரும்பினாலும், அதை விட்டு விட‌ உன‌க்கு முடிய‌வில்லை. அப்பாவ‌மே க‌ட‌வுளை விட்டு உன்னைத் தூர‌மாக்குகிற‌து. நீ அப்பாவ‌த்தை அறிக்கை  செய்து முற்றிலும் விட்டுவிடாவில் நீ தேவ‌னோடு ஐக்கிய‌மாயிருக்க‌ முடியாது.
த‌ப்பித‌ம் என்று அறிந்த எல்லாவ‌ற்றையும் விட்டு நீ வில‌கியிருக்கிறாயா? அல்ல‌து  பாவ‌ம் என்று அறிந்தும், அப்பாவ‌ம் உன் ஜீவிய‌த்தில் நிலைத்திருக்க‌ இட‌ம்  கொடுக்கிறாயா?

அறிக்கை ம‌ட்டும் போதாது, ச‌ரிப்ப‌டுத்த‌வேண்டும்.
த‌ப்பித‌ங்க‌ளை ச‌ரியாக்க‌ப்ப‌ட‌வும் வேண்டும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌முடையும்ப‌டி நீ  ஏதாவ‌து பேசியிருந்தால், செய்திருந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் நீ ம‌ன்னிப்புக்  கேட்க‌வேண்டும். ம‌னித‌ரோடு ஐக்கிய‌மாகுத‌லே க‌ட‌வுளோடு ஐக்கிய‌ப்ப‌டுத‌லாகும்.
ம‌னித‌ருக்கு விரோத‌மாய்ச் செய்யும் குற்ற‌ம் க‌ட‌வுளுக்கும் விரோத‌மான‌து. நீ உன் ச‌கோத‌ர‌னுக்கு விரோத‌மாக‌க் குற்ற‌ம் செய்துகொண்டு க‌ட‌வுளுட‌ன் ஐக்கிய‌மாய்  ஜீவிக்க‌முடியாது. குற்ற‌ம‌ற்ற‌ ம‌ன‌ச்சாட்சி உன‌க்கு வேண்டும். ஒருவேளை நீ
திருப்பிக் கொடாத‌ க‌ட‌ன் இன்னும் இருக்க‌லாம். நீ க‌ட‌வுளுக்கு முன் உன்னைத் தாழ்த்தி, ப‌ரிசுத்தாவியான‌வ‌ர் உன்னைச் சோதித்த‌றியும்ப‌டி க‌ட‌வுளை நோக்கிப் பிரார்த்திப்பாயாகில், அவ‌ர் எல்லாவ‌ற்றையும் உன‌க்கு வெளிப்ப‌டுத்துவார். நீ
ச‌ரிப்ப‌டுத்த‌வேண்டிய‌ குற்ற‌ங்க‌ளை அவ‌ர் உன‌க்குக்காட்டுவார். விட்டுவிட‌ வேண்டிய‌ பாவ‌ங்க‌ளையும் உன‌க்கு வெளிப்ப‌டுத்துவார். பாவ‌ அறிக்கை, பாவ‌த்தை
வெறுத்து வில‌க்குத‌ல், ந‌ஷ்ட‌ஈடு செலுத்துத‌ல் இவைக‌ளினாலேய‌ன்றி  வேறெவ்வித‌த்தினாலும் நாம் தேவ‌னோடு ஐக்கிய‌மாய் ஜீவிக்க‌ முடியாது. பாவ‌ம் ஒன்றே  ந‌ம‌க்கும் க‌ட‌வுளுக்கும் ந‌டுவிலுள்ள பெரிய‌ த‌டை. எவ்வித‌த்திலும் இந்த‌த் த‌டை நீக்க‌ப்ப‌ட‌வேண்டும்.

டொரான்டோவிலுள்ள‌ டோரி அலெக்சாந்த‌ர் கூட்ட‌த்தில் 1905ஆம் வ‌ருட‌த்தில் நான்  குண‌ப்ப‌ட்ட‌போது தெருக்க‌ளிலும், க‌டை வீதிக‌ளிலும், மோட்டார் கார்க‌ளிலும் எங்கு  பார்த்தாலும் ஓர் அங்குல‌ அக‌ல‌மும், ஆறு அங்குல‌ நீள‌முமுள்ள‌ ஆயிர‌க்க‌ண‌க்காக‌
சிறு வெள்ளை அட்டைக‌ளை நான் க‌ண்டேன். அவ்வ‌ட்டைக‌ளின் இருப்ப‌க்க‌ங்க‌ளிலும் சிவ‌ப்பு எழுத்தில் "தேவ‌னோடு ந‌ல்ம‌ன‌ பொருந்தி ஒப்புர‌வாகு" என‌  எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. அந்த‌ அட்டை எப்ப‌க்க‌த்தில் இருந்தாலும், செயதி மாறாதிருந்த‌து. அவ்வாச‌க‌த்தை வாசித்த‌தின் ப‌ல‌னாக‌ ஆயிர‌க்க‌ண‌க்காக‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் குற்ற‌த்தை உண‌ர்ந்த‌ன‌ர்.

இதைப்போன்ற‌ பாவ‌ உண‌ர்ச்சியே உயிர்மீட்சிக்கும் அவ‌சிய‌ம். தேவ‌னுடைய‌ ஜ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள் பாதையில் இருக்கும் க‌ல்க‌ளைப் போன்ற‌ பாவ‌ங்க‌ளை எடுத்து  அப்புற‌ப்ப‌டுத்த‌வேண்டும். அப்போது தேவாவியான‌வ‌ர் த‌டையின்றி  ந‌ம்மேல் ஊற்ற‌ப்ப‌டுவார்.

2.
வியாகுல‌த்தோடு கூடிய‌ ஜெப‌ம்

வேத‌னையுட‌ன் நாம் ஜெப‌ம் ப‌ண்ண‌ அறியும்போது உயிர்மீட்சி உண்டாகும். "சியோனோவெனில்  ஒருமிக்க‌ வேத‌னைப்ப‌ட்டும், த‌ன் குமார‌ரைப் பெற்றும் இருக்கிற‌து" (ஏசாயா 66:8). ஒரு குழ‌ந்தை வேத‌னையில்லாம‌ல் பிற‌க்க‌ முடியுமா? முடியாதே. ஒவ்வொரு புது ஜீவ‌னும்  இவ்வுல‌கில் உற்ப‌த்தியாகும்போது வேத‌னையும், பாடும் கூட‌வே சேர்ந்து வ‌ர‌வேண்டும்
என்ப‌து க‌ட‌வுளின் ஒழுங்கு. வேத‌னைக்குத் த‌ப்பித்துக்கொள்ள‌ முடியாது.
இதைப்போன்றே, தேவ‌னுடைய‌ குடும்ப‌த்தில் பிள்ளைக‌ள் பிற‌க்கும் ஒழுங்கும்
இருக்கிற‌து. சில‌ர் ம‌ன‌வேத‌னைய‌டைய‌ வேண்டும். இக்கால‌த்தில் ம‌ன‌நேர்வு
அடைகிற‌வ‌ர்க‌ள் சொற்ப‌ப் பேராய் இருப்ப‌தினாலேயே சில‌ர் மாத்திர‌ம்
இர‌ட்சிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். என் ந‌ண்ப‌னே, நாம் இர‌வு முழுவ‌தும் அல்ல‌து பாதி
இர‌வாவ‌து தூக்க‌மின்றி, ம‌ன‌வேத‌னையுட‌ன் ஜெப‌த்தில் த‌ரித்திருந்தால் ம‌ட்டும்,
ஆத்துமாக்க‌ள் தேவ‌னுடைய‌ இராஜ்ய‌த்தில் பிற‌க்க‌க்கூடும். உயிர்மீட்சியும்
உண்டாகும்.

அநேக‌ சுவிசேஷ‌க‌ர் த‌ங்க‌ளுட‌ன் ந‌ன்றாய்ப் பாட‌க்கூடிய‌வ‌ர்க‌ளைக் கூட்டிப்போவ‌து  வ‌ழ‌க்க‌ம். ஆனால் பின்னி என்ப‌வ‌ர் ஜெபிக்கிற‌ ஒருவ‌ரைக் கூட்டிக்கொண்டுபோவ‌து  வ‌ழ‌க்க‌ம். அவ‌ர் பெய‌ர் நாஷ். பின்னி பிர‌ச‌ங்க‌ம் செய்கையில் இந்த‌ ஜெப‌வீர‌ன்,  த‌னிமையாய் ஒரு காட்டிற்குப்போய், த‌ம் உள்ள‌ங்கைக‌ளால் முக‌த்தை மூடி, பின்னியை அநேக‌ரின் ஆத்தும‌ இர‌ட்சிப்புக்காக‌ ஆண்ட‌வ‌ர் உப‌யோகிக்கும்ப‌டி ஆத்தும‌ வேத‌னையோடு ஜெபிப்பார். பின்னியும் வேத‌னையுட‌ன் ஜெபிப்பது உண்டு. வில்லிய‌ம்
பிரேம்வெல் என்ப‌வ‌ர் ஆத்தும‌ ஆதாய‌த்திற்காக‌ ஒரு குழியிலிருந்து சாப்பாடு
இல்லாம‌ல் 36 ம‌ணி நேர‌ம் ஜெபித்தார். அநேக‌ நூற்றாண்டுக‌ளாக‌ தேவ‌ ஊழிய‌ர்க‌ள் வேத‌னையோடு ஜெபித்திருக்கிறார்க‌ள். உயிர்மீட்சி உண்டாக‌ வேண்டுமானால் நாம் செய்ய‌  வேண்டிய‌ பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ளில் பாதி ஜெப‌மே.

3.
கிறிஸ்துவுக்காக‌ நாம் தைரிய‌மாய்ச் சாட்சி ப‌க‌ர்ந்தால் உயிர்மீட்சி உண்டாகும்.

தேவ‌ வ‌ச‌ன‌த்தையே நாம் பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டும். ந‌ம‌து வார்த்தைக‌ளே பாவ‌
உண‌ர்ச்சியையும், குண‌ப்ப‌டுத‌லையும் உண்டாக்கும்.

க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தைக‌ள் ச‌ம்ம‌ட்டியைப்போல் இருக்கின்ற‌ன‌. க‌ல்லான‌
இருத‌ய‌த்தையும் அவைக‌ள் உடைக்கின்ற‌ன‌. ப‌ட்ட‌ய‌ம்போன்று அவைக‌ள் இருத‌ய‌த்தை  ஊடுருவ‌க் குத்துகின்ற‌ன‌. அக்கினியைப் போன்று அவைக‌ள் பாவ‌ம‌ற‌ இருத‌ய‌த்தை  எரித்து சுத்திகரிக்கின்ற‌ன‌. உயிர்மீட்சி உண்டாக‌ வேண்டுமானால் தேவ‌னுடைய‌  பிள்ளைக‌ள் தைரிய‌மாய்த் தேவ‌ வார்த்தைக‌ளைக் கூறி அறிவிக்க வேண்டும்.

தேவ‌னால் வ‌ல்ல‌மையாய் உப‌யோகிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், உயிர்மீட்சி ந‌டைபெற்ற‌
கால‌த்திலும், சுவிசேஷ‌ப்பிர‌ப‌ல்ய‌த்திலும் ஐந்து பொருள்க‌ளின் பேரிலேயே
பிர‌ச‌ங்க‌ம் செய்த‌தாக‌ ச‌ரித்திர‌த்தின் மூல‌ம் நான் அறிந்தேன் இந்த‌ ஐந்து
பொருள்க‌ளும் திட்ட‌மான‌ பாவ‌ உண‌ர்வை ஜ‌ன‌ங்க‌ளுக்குள் உண்டாக்கின‌. அவை  எவைக‌ளெனில் பாவ‌ம், இர‌ட்சிப்பு, மோட்ச‌ம், ந‌ர‌க‌ம், நியாய‌த்தீர்ப்பு
என்ப‌வைக‌ளே. பாவ‌த்தின்மேல் பிர‌ச‌ங்க‌ங்க‌ள் செய்ய‌வேண்டும் திட்ட‌மான‌ பாவ‌  உண‌ர்ச்சி தோன்ற‌வேண்டுமானால், பாவ‌த்தைத் தெளிவாக‌க் காட்ட‌வேண்டும். வியாதியைக்  காட்டி அத‌ற்குரிய‌ ம‌ருந்தையும் கூற‌வேண்டும். மேலும், அவிசுவாச‌மாகிய‌  பாவ‌த்தையும், கிறிஸ்துவைப் புற‌க்க‌ணித்த‌லாகிய‌ பாவ‌த்தையும் காட்டுத‌ல் அதிக‌  அவ‌சிய‌மே. மனித‌ர் யாவ‌ரும் தேவ‌ பார்வையில் பாவிக‌ள் என்ப‌தைத் தெளிவாய்  வ‌ற்புறுத்த‌ வேண்டும்.

அடுத்தாற்போல் இர‌ட்சிப்பைக் குறித்துப் பேச‌ வேண்டும். இதுவே பாவ‌ நிவ‌ர்த்தி;  பாவ‌ப் பிணியைப்போக்கும் ஔஷ‌த‌ம். பின்பு, நித்திய‌த்தைப்ப‌ற்றியும் பேச‌ வேண்டும்.  நிச்ச‌ய‌மாக‌வே நித்திய‌ம் உண்டு. உல‌க‌ம் அநித்திய‌ம். ம‌றுமையிலே ஒவ்வொருவ‌ருக்கும் நித்திய‌ம் இருக்கிற‌து என்ப‌தை விள‌க்க‌வேண்டும். இவைக‌ள் ம‌ட்டும் போதாது. நியாய‌த்தீர்ப்பைப்ப‌ற்றியும் கூற‌ வேண்டும். ஒவ்வொரு ம‌னித‌னும் த‌ன்னைச் சிருஷ்டித்த‌ க‌ர்த்தாவுக்கு முன் நின்று க‌ண‌க்கு ஒப்புவிக்க‌ வேண்டும் என்ப‌தை அழுத்திக் காட்ட‌வேண்டும். "உன் தேவ‌னைச் ச‌ந்திக்க‌ ஆய‌த்த‌ப்ப‌டு" (ஆமோஸ் 4:12). இவ்வாக்கிய‌த்தையும் எடுத்துக்கூறுவ‌து ந‌ல்ல‌து.

இவ்வைந்து ச‌த்திய‌ங்க‌ளையும் ம‌க்க‌ளுக்குத் தெளிவாய் காட்டினால், பாவ‌
உண‌ர்ச்சியும், இர‌ட்சிப்பும் முடிவில் உயிர்மீட்சியும் நிச்ச‌ய‌மாய் உண்டாகும்.
அப்போஸ்த‌ல‌ர் இச்ச‌த்திய‌ங்க‌ளை உப‌தேசித்த‌ன‌ர். சென்ற‌ ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌,  உயிர்மீட்சிக் கூட்ட‌ங்க‌ளிலும், சுவிசேஷ‌ப்பிர‌ப‌ல்ய‌க் கூட்ட‌ங்க‌ளிலும்  இச்ச‌த்திய‌ங்க‌ள் மீதே பிர‌ச‌ங்கங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கின்ற‌ன.

4.
பரிசுத்த‌ ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம்
ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ரின் வ‌ர‌ங்க‌ளையும், அபிஷேக‌த்தையும் பெற்ற‌வ‌ர்க‌ளாய்
ஊழிய‌ம் செய்யும்போது உயிர்மீட்சி உண்டாகும். கிரியை ந‌ட‌ப்பிக்கிற‌வ‌ர் ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ரே காரிய‌ க‌ர்த்தா அவ‌ரே. இது அவ‌ருடைய‌ கால‌ம். ம‌னித‌ரின்  இருத‌ய‌ங்க‌ளில் பாவ‌ உண‌ர்ச்சியையும், இர‌ட்சிக்கும் விசுவாச‌த்தையும்  உண்டாக்குகிற‌வ‌ர் அவ‌ரே. அவ‌ர் மூல‌மாக‌வே ஜ‌ன‌ங்க‌ள் ம‌று பிற‌ப்ப‌டைகிறார்க‌ள்.  தேவ‌னுடைய‌ வார்த்தைக‌ள் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டும்போது ஆவியான‌வ‌ர் அதைச் செய்கிறார்.  ஆக‌வே நாம் அவ‌ர்மேல் சார்ந்திருக்க‌ வேண்டும். நாம் ஆவியின் நிறைவையும்  அபிஷேக‌த்தையும் பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ப் பிர‌ச‌ங்கிக்கிறோம் என்ற‌ நிச்ச‌ய‌ம் ந‌ம‌க்கு  வேண்டும்.

க‌ட‌ந்த‌ நூற்றாண்டுக‌ளில் தேவ‌ன் உப‌யோகித்த‌ ம‌னித‌ர்க‌ள் ஆவியான‌வ‌ரின்
அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளே. அவ‌ர்க‌ள் தேவ‌ ச‌முக‌த்தில் காத்திருந்து அவ‌ர‌து
அபிஷேக‌ம் பெற்ற‌ பின்ன‌ரே, வெளியே சென்று ஜெபிப்போராக‌வும், ஜெய‌ம்
பெற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் இருந்த‌ன‌ர்.

பின்னி, ஜாண் வெஸ்லி, ஜியார்ஜ், உட்பீல்டு முத‌லான‌ பிர‌ச‌ங்கிமார்க‌ள் எல்லாரும்  ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். வெஸ்லி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு  காலை 3 ம‌ணிக்கு த‌ரித்திருக்கையில் அபிஷேக‌ம் பெற்ற‌தாக‌த் த‌ன் அனுப‌வ‌த்தைக்  கூறியிருக்கிறார். டீ.எல். மூடி அவ‌ர்க‌ளும் அபிஷேக‌ம் பெற்றிருந்தார். அவ‌ர்  பெற்றிருந்த‌ அபிஷேக‌ம் அப‌ரிமித‌மாயிருந்த‌ப‌டியால் க‌ட‌வுள் த‌ம‌து க‌ர‌த்தை
நிறுத்தும்ப‌டி கேட்டாராம். அபிஷேக‌ம் பெற்ற‌த‌ற்கு முன் அவ‌ருடைய‌
பிர‌ச‌ங்க‌த்தால் சில‌ரே குண‌ப்ப‌ட்டார்க‌ள். அபிஷேக‌ம் பெற்ற‌ பின்பு, அதே
பிர‌ச‌ங்க‌ங்க‌ளைத் திரும்ப‌வும் அவ‌ர் செய்யும்போது அநேக‌ ஆண்க‌ளும், பெண்க‌ளும்  குண‌ப்ப‌‌ட்ட‌தை அவ‌ர் க‌ண்டார். இவான் ராப‌ர்ட்ஸ் என்ப‌வ‌ரும் அபிஷேக‌ம் பெற்ற‌  ஒரு பிர‌ச‌ங்கியாய். அவ‌ர் தேவ‌னைச் ச‌ந்தித்து, ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் பெற்று,  அப்பெல‌த்தால் வேல்ஸ் தேச‌ம் முழு வ‌தையும் ப‌ர‌ம‌ அக்கினியால் கொளுத்தி, எங்கும்  உயிர்மீட்சி உண்டாகும்ப‌டி செய்தார் முற்கால‌ மெத‌டிஸ்டு பிர‌ச‌ங்கிமார் எல்லாரும்  அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளாயிருந்த‌ப‌டியால், அவ‌ர்க‌ள் அட்லாண்டிக் ச‌முத்திர‌த்தின்
இரு ப‌க்க‌ங்க‌ளிலுமுள்ள‌ தேச‌ங்க‌ளில், சுவிசேஷ‌ம் கூறி அறிவிக்கையில், அக்கினி  போன்று உயிர்மீட்சி எங்கும் ப‌ர‌வின‌து.

ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌த்தின் வ‌ல்ல‌மையை ஊழிய‌ர்க‌ள் உண‌ராதிருக்க‌லாம். ஆனால்  க‌ட‌வுள் வ‌ல்ல‌மையாய் உப‌யோகிக்கிற‌வ‌ர்க‌ள் மேல் ஓர் அற்புத‌ சக்தி  த‌ங்கியிருக்கிற‌து. எங்குமுள்ள‌வ‌ர்க‌ள் விய‌க்க‌த்த‌க்க‌ ப‌ல‌ன்க‌ள் உண்டாவ‌து  அந்த‌ வ‌ல்ல‌மையாலேயே. ஆவியின் அபிஷேக‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள், ஆவியான‌வ‌ரால் உடுத்த‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். என் ச‌கோத‌ர‌ர்க‌ளே! இக்கால‌த்தில் ந‌ம‌க்கும்  இவ்வையான‌ ஆவியான‌வ‌ரின் அபிஷேக‌ம் தேவை. ந‌ம்மில் அநேக‌ர்  வ‌ல்ல‌மைய‌ற்ற‌வ‌ர்க‌ளாயிருக்கிறோம். ந‌ம‌து சொந்த‌ ஆவியினாலேயே வேலைக‌ள்  செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. ந‌ம‌து ஊழிய‌ம் அற்ப‌மான‌தாக‌வும் இருக்கிற‌து. ஆக‌வே  ந‌ம‌க்கு வ‌ல்ல‌மையைக் கொடுக்க‌க்கூடிய‌ ப‌ரிசுத்தாவியான‌வ‌ரின் நிறைவை நாம் பெற்று
வ‌ல்ல‌மையான‌ ஊழிய‌ம் செய்வோமாக‌.

நாம் உயிர்மீட்சிக்காக‌க் க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ளைச் ச‌கிக்க‌ ஆய‌த்த‌மாயிருக்கிறோமா?
உயிர்மீட்சி வ‌ருவ‌த‌ற்காக‌ நீ செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ளைச் செய்வ‌தில்,
பாடுப‌டுத‌லை ஏற்று, அத‌ற்கென‌ உழைக்கிற‌வ‌ர்க‌ளில் நீயும் ஒருவ‌னாயிருப்பாயா?  க‌ட‌வுள‌து நோக்க‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட‌ வேண்டும். உயிர்மீட்சிக்காக‌ப்  பிரார்த்திக்கிற‌வ‌ர்க‌ளோடு நாம் சேர்ந்து கொண்டு ஊக்க‌மாய் ஜெபிப்போமாக‌. பெரிய‌  அப்போஸ்த‌ல‌ன் கொடுத்த‌ கட்டளை‌க்குக் கீழ்ப்ப‌டிந்து, சுவிசேஷ‌க‌னுடைய‌ வேலைச் செய்து வ‌ருவோமாக‌.

No comments:

Post a Comment